Apr 4, 2025 - 05:29 PM -
0
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (04) வருகை தரும் நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
பெயர் விபரங்கள்,
1. சந்தியா பாக்யராஜ்
2. சகாயம் சவேரியர் அடிமை
3. ரவிச்சந்திரன் முத்துகளஞ்சியம்
4. ராஜப்பன் ரஞ்சித்
5. ஆறுமுகம் பாலமுருகன்
6. ஜெகன் ஆராக்கியம் எபிரோன்
7. சேசு மைக்கல் யோவான்ஸ் நானன்
8. சகாயம் இன்னாசி
9. ஜார்ஜ் அந்தோனி ஆர்னாட் ரிச்சே
10. அடிமை லியோன் அந்தோனி சிசேரியன்
11. சேசு இருதயம் கிறிஸ்துராஜா
--

