Apr 4, 2025 - 05:58 PM -
0
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (04) 8% சரிந்து, 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயின் உச்ச காலத்தில் இருந்த மிகக் குறைந்த விலையை பதிவு செய்துள்ளது.
அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65 அமெரிக்க டொலருக்குக் கீழ் சரிந்துள்ளது.
ஏப்ரல் 3 ஆம் திகதி ரொய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஓபெக்+ அமைப்பு எதிர்பாராத வகையில் தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்தது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய இறக்குமதி வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய சதவீத இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

