Apr 4, 2025 - 06:01 PM -
0
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படுவது குறித்து இலங்கை வர்த்தக சம்மேளனம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவானது சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஏற்றுமதிகளையும், இலங்கையின் மொத்த வணிக ஏற்றுமதியில் 25% ஐயும் கொண்டுள்ளது.
இந்த வளர்ச்சி நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. மேலும், பரந்த உலகளாவிய வர்த்தக இடையூறுகள் பொருளாதார வளர்ச்சியை, இது மெதுவாக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய ஏற்றுமதி சந்தைகளில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒட்டுமொத்த தேவையை இது பாதிக்கும்.
IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் பாதிப்பகுதியை கடந்துள்ள நிலையில் நாம் உள்ளோம். மேலும் தற்போது கடுமையான நிதிச் சூழ்நிலையை சமாளித்து கடந்து வருகின்றோம்.இதனைக் கருத்தில் கொண்டு, இலங்கை உயர் வரி விகிதத் தொகுதியிலிருந்து தாழ்த்திப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திறனை பெறுவது மிகவும் அவசியமானது. அரசாங்கம் அதன் கட்டணக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்யவும், வர்த்தக வசதியை மேம்படுத்தல் மற்றும் வணிகம் செய்தல் ஆகியவற்றை எளிதாக்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த இது ஒரு சரியான தருணமாகும்.
அமெரிக்க வரிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் ஏற்றுமதித் துறைக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான தீர்வுகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ஒரு குழுவை அமைத்துள்ளார். அதற்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்த வரிவிதிப்புகளின் மூலம் ஏற்படுவதற்குச் சாத்தியமான பொருளாதார தாக்கத்தைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் மூலோபாயப் படிலளிப்புச் செயன்முறையை உருவாக்க வேண்டும்.
இதற்கான பணிகளில், அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயலாற்ற இலங்கை வர்த்தக சம்மேளனம் உறுதிபூண்டுள்ளது. இலங்கையின் ஏற்றுமதித் துறையை நிலைநிறுத்தவும் வலுப்படுத்தவும் இராஜதந்திர மற்றும் கொள்கை சார்ந்த தீர்வுகளை தீவிரமாகப் பின்பற்றும் அதேவேளை, இலங்கையின் வர்த்தக நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் அனைத்து பங்குதாரர்களும் ஒத்துழைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.