Apr 4, 2025 - 06:44 PM -
0
பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை (OIC) இடமாற்றம் செய்ய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய எடுத்த தீர்மானம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் (NPC) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த இடமாற்ற தீர்மானம், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

