Apr 4, 2025 - 08:30 PM -
0
எல்பிட்டிய ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் இன்று (04) இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்த ஒருவரை குறிவைத்து முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த குழுவினர், வீட்டில் இருந்த நபரிடம் வாள் ஒன்றை கேட்டதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பெலிகஸ்வேல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய திருமணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.