Apr 4, 2025 - 09:18 PM -
0
இலங்கையின் பொருளாதார மீட்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது.
மேலும், அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட பரஸ்பர வரி தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமநிலையை நியாயமாக நிர்வகிக்கும் வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
"இலங்கை தற்போது IMF இன் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் பொருளாதார மீட்சியை நோக்கி பயணித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த 44% பரஸ்பர வரி தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமநிலையை நியாயமாக நிர்வகிக்கும் வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், இரு நாடுகளும் புதிய வளர்ச்சி யுகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்," என இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.