Apr 4, 2025 - 10:08 PM -
0
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக மாஸ், ஆக்ஷன் காட்சிகள் திரையரங்க கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளன.
‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய போஸ்டர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி யூடியூப்பில் அதிக வியூஸ்களை கடந்து சாதனை படைத்தது. அதேபோல படத்தின் 2 பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. படம் வரும் ஏப்ரல் 10-ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் தியேட்டருக்கான ‘வைப்’ அனுபவத்தை உறுதி செய்யும் என்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அஜித்தை இப்படியான முந்தைய படங்களின் கெட்டப்புகளுடன் பார்ப்பது ரசிக்க்க வைக்கிறது.
ட்ரெய்லர் இதோ...