Apr 5, 2025 - 11:47 AM -
0
குறித்த புகையிரதம் இன்று (05) காலை 8:10 இற்கு நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.
குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கிப் பயணம் மேற்கொள்ள வருகை தந்த பயணிகள் பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர் ,மேலும் குறித்த ரயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் எல்ல நோக்கி செல்வதற்கு வருகைத் தந்து தடம்புரண்ட புகையிரதத்தினை தண்டவாளங்களில் அமர்த்தும் வரை சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருக்க நேரிட்டது.
எவ்வாராயினும் மிக விரைவில் புகையிரதம் திருத்தப்பட்டு பயணங்கள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக நானுஓயா புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
--