செய்திகள்
கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

Apr 5, 2025 - 12:11 PM -

0

கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

கொழும்பில் இன்று (05) நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். 

முன்னணி சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ,  புபுது ஜயகொட உள்ளிட்ட தரப்பினர் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளுக்குள் அதன் உறுப்பினர்கள் நுழைவதைத் தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05