Apr 6, 2025 - 12:32 PM -
0
நமது நாடு ஆபத்தில் சிக்கியிருந்தபோது, இந்தியாவும் போலவே பிரதமர் மோடியும் எங்களுக்கு பல உதவிகளைச் செய்தார். எனவே, நாட்டுக்கு மதிப்பு சேர்க்கும், பயன் கிட்டும், மக்களுக்கு சேவை கிட்டும் விதமாக அமையும் வெற்றிகரமான பயணமாக இது கருதப்படுகிறது. இந்த விஜயம் நாட்டுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொலன்னாவையில் நேற்று (05) இரவு வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் அப்பகுதிக்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு தேர்தல் ஊடாக மக்கள் கருத்தை மக்களிடம் இருந்தே மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அல்லது துக்கமாக இருக்கிறார்களா என்பதை ஆராய்ந்து பாருங்கள். நாட்டின் பயணப் பாதை குறித்தும் எதிர்காலம் குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பிப் பாருங்கள். மக்கள் விரக்தியில் உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த வெள்ளத்திற்கு நிலையான தீர்வை மரிக்கார் அவர்களே பெற்றுத் தந்தார். ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைத்திருந்தால் இதனைவிடவும் பல தீர்வுகளைப் பெற்றுத் தந்திருப்போம். ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்த வண்ணம் இது குறித்து ஆராய்ந்து, கவனம் செலுத்தி, களத்தில் இறங்கி இயலுமானதைச் செய்து வருகிறது.
ஆனால் தற்போதைய அரசாங்கம் இன்னும் இவற்றை கண்டுகொள்ளாமல் கைவாறு அடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பெரும் சோகத்துக்கு மத்தியில் இருந்தாலும் அரசாங்கத்திடம் வழங்குவதற்கு பதில்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

