Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்

Apr 7, 2025 - 12:15 PM

பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்
Mobitel Inner 1278

கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், இன்று (07) காலை 9.51 மணியளவில் தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. 

வர்த்தகம் இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சூட்டெண் 639.01 புள்ளிகள் குறைந்து 14,734.34 புள்ளிகளாகவும், S&P SL20 விலைச் சூட்டெண் 240.45 புள்ளிகள் குறைந்து 4,292.90 புள்ளிகளாகவும் பதவாகியிருந்தன.

இது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண்ணுடன் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது முறையே 5.30% மற்றும் 4.16% சரிவைக் குறிக்கிறது.

 

2020 ஏப்ரல் 30 அன்று கொழும்பு பங்குச் சந்தையால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வழிமுறையின்படி, S&P SL20 குறியீட்டின் வீழ்ச்சியின் அளவைப் பொறுத்து, ஒரே நாளில் மூன்று சந்தர்ப்பங்களில் பங்குச் சந்தை வர்த்தகம் இடைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

S&P SL20 குறியீடு 5% சரிந்தால், தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்படுவதுடன், அதன் பிறகு, வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் அதேவேளை, S&P SL20 குறியீடு மேலும் 2.5% சரிந்தால், தினசரி வர்த்தக நடவடிக்கை மேலும் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்படும். 

அதாவது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது S&P SL20 குறியீடு ஒட்டுமொத்தமாக 7.5% சரிந்தால் ஒரே நாளில் இரண்டாவது முறையாகவும் பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தப்படும். 

இதற்கிடையில், S&P SL20 குறியீடு குறித்த நாளில் மேலும் 2.5% சரிந்தால், அதாவது ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 10% க்கும் அதிகமாக சரிந்தால், சம்பந்தப்பட்ட நாளில் பங்குச் சந்தை மூடப்படும். 


இதேவேளை, வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 1987இற்கு பின் நிகழும் மிகப்பெறிய பங்குச்சந்தை சரிவாக அமையும். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.  

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் உயர்வை காட்டியது. அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. 

ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278