Apr 7, 2025 - 10:20 AM -
0
DFCC வங்கியின் கங்கொடவில கிளை 2025 ஏப்ரல் 1 ம் திகதி முதல் இல 170 பழைய கெஸ்பேவ வீதி கங்கொடவில நுகேகொட என்ற முகவரியில் அமைந்துள்ள விசாலமான நவீன வசதியுடன் கூடிய இடத்தில் இயங்கும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம். இந்த இடமாற்றம் வங்கியின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியையும் வங்கி அணுகலை இலகுப்படுத்தி சிறந்த சேவையை வழங்குவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டையும் மென்மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நவீன வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உயர்தரமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கிளையானது நவீன டிஜிட்டல் வசதிகளை தனிப்பயனாளர் சேவையுடன் ஒருங்கிணைப்பதனூடாக வங்கி அனுபவத்தை மேலும் விஸ்தரிக்கின்றது. இது ATM சேவைகள் மற்றும் மின்னணு காசோலை வைப்பு வசதிகள் (Electronic Cheque deposit facilities) உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வங்கி வசதிகளுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இது தடையற்ற சுமுகமான பரிவர்த்தனைகளை உறுதி செய்கின்றது. மேலும் பிரீமியம் வாடிக்கையார்களுக்காக ஒரு பிரத்தியேக பகுதியும் (Pinnacle) அறிமுகப்படுத்தப்படடுள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர் செயற்பாடுகளையும் சிறப்புமிக்கதாக மாற்றுவதற்கான DFCC வங்கியின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகின்றது எனலாம்.
வங்கிக் கிளைகள் மற்றும் விநியோகத்திற்கான DFCC வங்கியின் துணைத்தலைவரான துமிந்த சில்வா இது பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். 'வாடிக்கையாளர்கள் இலகுவில் அணுகக் கூடியவாறான மற்றும் சிறப்பான சேவைகளை மேம்படுத்துவதற்கான எங்கள் பரந்துபட்ட உத்தியின் ஓர பகுதியாகவே எங்கள் கங்கொடவில கிளை இடமாற்றம் செய்யப்படுகின்றது. மிகவும் நவீன வசதிகள் உள்ளடங்கிய வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பும் உகந்ததொரு இடத்தை வழங்குவதனூடாக நாம் எமது வடிக்கையாளர்களுக்கு திறமையான சேவைகளை வழங்கும் எமது தனித்துவமான திறனை மென்மேலும் வலுப்படுத்துகின்றோம்'.
DFCC வங்கி வலுவான கிளை வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கி தீர்வுகள் மூலம் தனது இருப்பை தொடர்ந்து விஸ்தரித்து வருகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நிதி சேவைகள் தொடர்பில் தடையற்ற மற்றும் நெகிழ்வான அணுகலை அனுபவிப்பதை உறுதி செய்கின்றது.
இது பற்றிய மேலும் விபரங்களை அறிந்துகொள்ள எமது வாடிக்கையாளர்கள் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கங்கொடவில கிளைக்கு வருகை தர முடியும் அல்லது 011 235 0000 என்ற DFCC வங்கி ஹொட்லைனைத் தொடர்பு கொள்ள முடியும்.
DFCC வங்கியைப் பற்றி
1955ம் ஆண்டு நிறுவப்பட்டு 1956ம் ஆண்டு முதல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள DFCC வங்கி PLC, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குப்படுத்தப்பட்டு ஃபிட்ச் மதிப்பீடுகளில் A (lka) என்ற மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த வங்கி திறைசேரி முதலீடு மற்றும் வர்த்தக நிதி தீர்வுகளுடன் கூடிய சில்லறை பெருநிறுவன மற்றும் SME வங்கி சேவைகளுக்கான விரிவான கணக்குத்திரட்டுக்களை வழங்குகின்றது.
வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு நிலையான நவீன வசதிகளுடன் கூடிய சேவைகள் உள்ளடங்கலாக DFCC வங்கி தடையற்றதும் பாதுகாப்பானதுமான வங்கி அனுபவத்தை வழங்கி வருகின்றது. இதில் DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் 13 கிளைகளின் வலையமைப்பு மற்றும் LankaPay நெட்வோர்க் வழியாக 5,500 க்கும் மேற்பட்ட ATM களை அணுகும் வசதி ஆகியவை உள்ளடங்கும்.
நிலையான நிதி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் தலைமைத்துவமாக DFCC வங்கி சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைப்பதற்கும் நீண்ட கால பொருளாதார மீள்தன்மையை வளர்ப்பதற்கும் உறுதிப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.