வணிகம்
4.4 Avurudu Wasi Pro Max ஊக்குவிப்புடன் புத்தாண்டை வரவேற்கவுள்ள Daraz Sri Lanka - இலங்கையின் மிகப் பாரிய இணையவழி புத்தாண்டு விற்பனை

Apr 7, 2025 - 10:25 AM -

0

4.4 Avurudu Wasi Pro Max ஊக்குவிப்புடன் புத்தாண்டை வரவேற்கவுள்ள Daraz Sri Lanka - இலங்கையின் மிகப் பாரிய இணையவழி புத்தாண்டு விற்பனை

நாட்டின் முன்னணி இணையவழி வர்த்தகத் தளமாகத் திகழ்ந்து வருகின்ற Daraz Sri Lanka, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 4.4 Avurudu Wasi Pro Max புத்தாண்டு ஊக்குவிப்பினை பெருமையுடன் ஆரம்பித்து வைத்துள்ளதுடன், 2025 ஏப்ரல் 8 வரை இது இடம்பெறவுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டினை டிஜிட்டல் வழியில் கொண்டாட வழிவகுத்துள்ள இந்த ஊக்குவிப்பானது, நிகரற்ற தள்ளுபடிகள், கலாச்சார அனுபவங்கள் மற்றும் ஈர்ந்திழுக்கின்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன், நாடளாவியரீதியில் வாடிக்கையாளர்கள் முற்றிலும் இணையவழியில் பண்டிகைக்கால ஷொப்பிங் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளித்துள்ளது. 

பண்டிகைக்கால உற்சாக உணர்வுடன் ஒன்றியதாக, இலத்திரனியல் சாதனங்கள், வீட்டுப் பாவனைச் சாதனங்கள், நவநாகரிகம், மற்றும் அழகு பராமரிப்பு உள்ளிட்ட மிகவும் நாடப்படுகின்ற பிரிவுகள் சிலவற்றில் 85% வரையான தள்ளுபடிகளுடன் குறுகிய கால விற்பனை ஊக்குவிப்பை Daraz வழங்குகின்றது. இந்த ஊக்குவிப்பு முன்னெடுப்படுகின்ற காலப்பகுதியில் தினசரி 75% தள்ளுபடியுடன் கவர்ச்சியான சலுகைகளும் அடங்கியுள்ளன. பல்வகைப்பட்ட பொருட்களை கட்டணமின்றி தமது இடங்களுக்கு விநியோக சேவை மூலம் பெற்றுக்கொள்ளும் நன்மையையும் கொள்வனவாளர்கள் அனுபவிக்க முடியும். மொத்தமாக ரூபா 50 மில்லியன் பெறுமதியான வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், பயன்பாட்டாளர்கள் தாம் விரும்புகின்ற தயாரிப்புக்களுக்கு மேலும் சேமிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்கின்றன. 

Baseus, Unilever, Hemas, Janet, Coolpad, Doogee, Nothing CMF, Amante, Quantum Fitness மற்றும் V Tec Furniture அடங்கலாக, நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான வர்த்தகநாமங்கள் பலவும் மிகவும் கவர்ச்சியான விலைகளில் தமது தயாரிப்புக்களை வழங்கவுள்ளன. 

புத்தாண்டு கொள்வனவு அனுபவத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்கும் வகையில், வட்டியின்றிய, 36 மாதங்கள் வரையான தவணைக் கொடுப்பனவுத் திட்டத்தை வழங்குவதற்கு பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் Daraz கைகோர்த்துள்ளது. கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, LOLC Finance, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அடங்கலாக), மக்கள் வங்கி, சம்பத் வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, மற்றும் யூனியன் வங்கி ஆகியன அதில் அடங்கியுள்ளன. பண்டிகைக்கால கனவுகளை சிக்கனமாக நனவாக்கிக் கொள்ளும் வகையில், விலைமிக்க பொருட்களை வாடிக்கையாளர்கள் இதன் மூலமாக இலகுவாகவும், நெகிழ்திறனுடனும் கொள்வனவு செய்ய முடியும். 

இதை விட, இலங்கை வங்கி அட்டைகள், கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி அட்டைகள், LOLC Finance, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, NDB வங்கி, HSBC அட்டை, சம்பத் வங்கி, மற்றும் யூனியன் வங்கி, Daraz Paylater மற்றும் Daraz Points உள்ளிட்ட பிரத்தியேக கொடுப்பனவுக் கூட்டாளர்களுடன் இணைந்து, தளவாரியாக 12% வரையான - ரூபா 5,000 வரையான கூடுதல் தள்ளுபடிகளையும் Daraz வழங்குகின்றது. கொள்வனவாளர்கள் மதிப்பைப் பெற்றுக்கொள்வதை இந்த கூடுதல் சேமிப்புக்கள் மேம்படுத்துவதுடன், மிகவும் வெகுமதியளிக்கும் அனுபவத்தையும் உறுதி செய்கின்றன. 

மேலும், நீங்கள் நேசிக்கும் பொருட்களை இன்றே கொள்வனவு செய்து, வட்டியின்றிய, 36 மாதங்கள் வரையான தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுடன் பின்னர் அவற்றைச் செலுத்தி முடிப்பதற்கான நெகிழ்திறனையும் அனுபவிக்க முடியும். 

Daraz Sri Lanka பிரதம வர்த்தக அதிகாரி ஒஷான் ரணதுங்க அவர்கள் இந்த கொள்வனவு நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கையில், “இப்புத்தாண்டில் இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற விலைகள், ரூபா 50 மில்லியன் பெறுமதியான வவுச்சர்கள், மற்றும் தொழில்நுட்பத்தினூடாக எமது கலாச்சாரத்தைக் கொண்டாடும் தளம் ஆகியவற்றுடன் ‘Pro Max’ அனுபவத்தை நாம் பெருமையுடன் வழங்குகின்றோம். பரிசுப்பொருட்களை வழங்குவதற்காக நீங்கள் கொள்வனவு செய்தாலும் சரி, வீட்டிலுள்ள பழைய பொருட்களுக்கு பதிலாக புதியவற்றை வாங்கினாலும் சரி, அல்லது அன்றாடப் பாவனைப் பொருட்களானாலும் சரி, இது வரை இல்லாத அளவில் மிகவும் வெகுமதியளிக்கும் ஒன்றாகவும், இலகுவானதாகவும் Daraz அவற்றை வழங்குகின்றது,” என்று குறிப்பிட்டார். 

Daraz app மற்றும் இணையத்தளத்தினூடாக கொள்வனவாளர்கள் தற்போது இவை அனைத்தையும் ஆராய்ந்து, டிஜிட்டல் பண்டிகைகளுடன் இணைந்து கொள்ள முடியும். 4.4 Avurudu Wasi Pro Max ஊக்குவிப்புப் பிரச்சாரத்துடன், இலங்கை மக்கள் புத்தாண்டை அனுபவிக்கும் வழிமுறைகளுக்கு Daraz தொடர்ந்தும் மீள்வரைவிலக்கணம் வகுத்து, சௌகரியம் மற்றும் வியத்தகு மதிப்பு என அனைத்தையும் ஒரே இடத்திலேயே வழங்குகின்றது.

Comments
0

MOST READ