Apr 7, 2025 - 04:37 PM -
0
வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் 2025 க்கு, தொடர்ச்சியான 14ஆவது தடவையாகவும் CBL Foods இன்டர்ஷனல் (பிரைவட்) லிமிடெட்டின் முதல்தர வர்ததக நாமமான, ரிட்ஸ்பரி பிரத்தியேக அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இந்தப் போட்டிகளில் சுமார் 1300 பாடசாலைகளின் 30,000க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்குவதனூடாக, விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் தடகள வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கும் வர்த்தக நாமத்தின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் முன்னெடுக்கப்படும் மிகவும் பழமையான தடகள போட்டிகளாக சேர் ஜோன் டாபர்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் அமைந்துள்ளன. இதனை இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனம் (SLSAA), ரிட்ஸ்பரி உடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது. கல்வி அமைச்சு இந்த ஏற்பாடுகளை மேற்பார்வை செய்கிறது. கடந்த ஆண்டுகளின் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து, நிகழ்வுகளின் ஆரம்பமாக, ரிட்ஸ்பரி ரிலே கானிவல் இம்முறை மாபெரும் மட்டத்தில் ஏப்ரல் 9 முதல் 11 ஆம் திகதி வரை தியகம மைதானத்தில் நடைபெறும்.
54ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வயது பிரிவுகளில் 12, 13, 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவுகள் அடங்கியிருக்கும். முதற் கட்டமாக தென், சப்ரகமுவ மாகாணங்களிலிருந்தும் மற்றும் மொனராகலை மாவட்டத்திலிருந்தும் போட்டிகள் மே மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பெலியத்த மைதானத்தில் நடைபெறும். இம்முறை கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் புதிய உள்ளடக்கமாக, கம்பஹாவில் போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்திலிருந்து பெருமளவான மாணவர்கள் பங்கேற்கின்றமை காரணமாக, ஜுன் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வத்துபிட்டிவல மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.
மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் பதுளை மாவட்ட போட்டிகள் திகன மைதானத்தில் ஜுன் 4 முதல் 6 வரை நடைபெறும். களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்ட போட்டிகள் பண்டாரகம பொது மைதானத்தில் ஜுலை 02 முதல் 04 வரை நடைபெறும். அதுபோன்று, வட மாகாணம் மற்றும் அனுராதபுர மாவட்ட போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் ஜுலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறும். கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் ஜுலை 19 முதல் 20 வரை நடைபெறும். 93ஆவது சேர் ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 21 முதல் 24 வரை கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்கள் அடங்கியிருக்கும். மேலும், சிரேஷ்ட சம்பியன்ஷிப் நாட்காட்டியில் மரதன் ஓட்ட நிகழ்வும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையினுள் இந்தப் போட்டிகள் நடைபெறும்.
நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த இளம் தடகள வீரர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வுடன் கைகோர்த்துள்ளதையிட்டு ரிட்ஸ்பரி பெருமிதம் கொள்கிறது. முதற் கட்டத்தில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு, கொழும்பில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான விறுவிறுப்பான வாய்ப்பும் கிடைக்கும்.
CBL Foods இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்துடன் ரிட்ஸ்பரி இணைந்து, சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளை ஆரம்பிப்பது பற்றி அறிவிப்பதையிட்டு பெருமை கொள்கிறது. இலங்கையில் இளம் விளையாட்டு திறமைகளை கட்டியெழுப்பி ஊக்குவிப்பதில் நாம் எம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளதுடன், அதற்கமைய நீண்ட காலமாக இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்துடன் பங்காண்மையை பேணி வருகிறோம். நாடு முழுவதையும் சேர்ந்த இளம் தடகள வீரர்களின் சாதனைகளை கொண்டாடும் இந்த தேசிய கட்டமைப்பின் பங்காளராக நாம் திகழ்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் திருமதி. டி.ஏ.எஸ்.எஸ். விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பங்காண்மையின் தொடர்ச்சியான பொருத்தப்பாடு மற்றும் வெற்றிகரமான செயற்பாடு போன்றன, இளம் தடகள வீரர்களை கட்டியெழுப்புவதிலும், தேசத்தின் சுகாதாரம் மற்றும் நலனை நிறைந்த கலாசாரத்தை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. அதில் ரிட்ஸ்பரி முக்கிய பங்காற்றிய வண்ணமுள்ளது.” என்றார்.
நாட்டின் இளம் தடகள திறமையாளர்களை மேம்படுத்துவதற்கான தங்கள் அர்ப்பணிப்பை விரிவுபடுத்தும் வகையில், ரிட்ஸ்பரி, ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கை அடைய ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை ஆதரிக்கும் தாய்நாட்டுக்கு வீரர் முயற்சியை நடத்துகிறது. இந்த ஆண்டு, இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 28 இலிருந்து 65 தடகள வீரர்களாக அதிகரிக்க ரிட்ஸ்பரி திட்டமிட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் சேர் ஜோன் டார்பட் தடகள சாம்பியன்ஷிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ரிட்ஸ்பரி சேர் ஜோன் டார்பட் தடகள சாம்பியன்ஷிப்புக்கு மேலதிகமாக, ரிட்ஸ்பரி இலங்கையில் ஹொக்கி, நீச்சல், ஸ்கொஷ், ரக்பி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறது. மிகவும் விரும்பப்படும் இனிப்புப் பண்ட தயாரிப்பு வர்த்தக நாமத்தின் இந்த முயற்சிகள், விளையாட்டு மூலம் நாட்டின் இளைஞர்களின் திறன்களை வளர்ப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.