Apr 7, 2025 - 08:08 PM -
0
கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதபோதகர் ஜோன் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே 21ம் திகதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த பார்ட்டியில், 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள சபையை சேர்ந்த போதகர் ஜோன் ஜெபராஜ் மீது பாலியல் முறைப்பாடு எழுந்தது.
புகாரின் பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் பொலிஸார் ஜோன் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஜோன் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.