Apr 7, 2025 - 08:41 PM -
0
2025 உள்ளூர் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) முதல்தர கிரிக்கெட் வீரர்கள் 45 பேருக்கு ஆண்டு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
நாட்டின் திறமையான வீரர்களை வலுப்படுத்தும் தொடர்ச்சியான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில், ஒப்பந்தம் பெற்ற வீரர்கள் A, B, C மற்றும் D என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

