Apr 8, 2025 - 08:53 AM -
0
இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது சிறந்த கேம்பிரிட்ஜ் ஆங்கில பதிவு நிலையங்களின் கௌரவமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில் விருது வழங்கும் விழாவொன்றை நடத்தியது, இந்த நிகழ்வானது பிரிட்டிஷ் கவுன்சிலின் கேம்பிரிட்ஜ் நிலையங்களின் பலஆண்டுகால சேவை மற்றும் பரீட்சை பதிவுகளின்போது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குதல் மற்றும் பெறுமதி சேர்க்கை மூலம் வர்த்தகத்தை வளர்ப்பதற்கான ஆதரவை நீடித்தமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 2024 ஆம்ஆண்டில் இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலினால் நடத்தப்பட்ட கேம்பிரிட்ஜ் ஆங்கில பரீட்சைகளில் முழுமதிப்பெண்களைப் பெற்ற இலங்கை மற்றும் மாலைத்தீவினைச் சேர்ந்த 74 மாணவர்களையும் இந்த விழாவானது அங்கீகரித்தது.
அவர்களின் தனித்துவம் மற்றும் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் பல பதிவுநிலையங்கள் சிறப்புப் பாராட்டுகளைப் பெற்றன. பிரிட்டிஷ் ஆங்கில கேம்பிரிட்ஜ் கல்லூரி பிளாட்டினம் விருதையும், மஹரகம, சர்வதேச ESOL கல்லூரி தங்க விருதையும், நீர்கொழும்பு, பிரிட்டிஷ் பரீட்சைகள் நிறுவனம் வெள்ளி விருதையும் பெற்றதுடன் வெண்கல விருதானது காலி, லூசிடன்ஸ்பீச் பாடசாலைக்கும் வழங்கப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் அதிக அளவில் பங்களித்தவர் மற்றும் 2024 ஆம்ஆண்டில் மாலைத்தீவில் முன்னணி பங்களிப்பாளராக விளங்கியவர் ஆகியோரை அங்கீகரித்து கௌரவித்தது. இந்த வெற்றியாளர்களுக்கு மொத்தமாக 10 பிராந்திய விருதுகள் வழங்கப்பட்டன.
மேலதிகமாக, 2024 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் ஆங்கிலத்திற்கான பதிவு நிலையமாக பிரிட்டிஷ் கவுன்சிலினால் வழங்கப்பட்ட பங்களிப்பைப்பாராட்டி, மேல் மாகாணத்தில் உள்ள பத்து பிறநிலையங்கள் சிறப்புவிருதுகளைப்பெற்றன.
இந்தநிகழ்வின்போது, பிரிட்டிஷ் கவுன்சிலின்பதிவு நிலையமாக அவர்களின் அசைக்கமுடியாத ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்காக இரண்டு தனிப்பட்ட ஆசிரியர்களும் நான்கு நிலையங்களும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2002 முதல்பிரிட்டிஷ். கம்பஹா, லிவினியாஆங்கில அகாடமியானது 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை, பிரிட்டிஷ் கவுன்சிலுக்கான கேம்பிரிட்ஜ் ஆங்கிலப் பதிவுகளில் வெளிப்படுத்திய அபரிமிதமான வளர்ச்சியைப்பாராட்டி, பிரகாசிக்கும் நட்சத்திர விருதினைப் பெற்றது.
பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிடப் பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ், இலங்கை மற்றும் மாலைத்தீவு பிரிட்டிஷ்கவுன்சிலின் பரீட்சைகள் பணிப்பாளர்டொமினிக்ஹட்சன்,பிரியங்காமுகர்ஜி சிரேஷ்ட முகாமையாளர் –சர்வதேச வர்த்தகம் மற்றும் தயாரிப்பு தீர்வுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊடக மற்றும் மதிப்பீட்டிற்கானதெற்காசியாவிற்கான பிரதம கணக்கியல் முகாமையாளர் கெவின்கோய்ன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நாடு முழுவதிலுமிருந்தும் மற்றும் மாலைத்தீவிலிருந்து 350க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரிட்டிஷ் கவுன்சில்ஆனது உலகம் முழுவதும் கேம்பிரிட்ஜ் ஆங்கிலபரீட்சைகளை வழங்குவதில் நீண்ட மற்றும் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளமையானது இந்தத் தகுதிகளின் நற்பெயரையும் அங்கீகாரத்தையும் தொடர்ச்சியாக தக்கவைக்க உதவுகிறது. இலங்கையில், பிரிட்டிஷ் கவுன்சில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக கேம்பிரிட்ஜ் மதிப்பீட்டு ஆங்கிலத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதன்மூலம் பாதுகாப்பான, நியாயமான மற்றும் நம்பகமான பரீட்சைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில்ஆனது 2024ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பிளாட்டினம் நிலைய அந்தஸ்தைப் பெற்றது, இது தெற்காசிய பிராந்தியத்தில் இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற முதல் அங்கீகரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் ஆங்கிலநிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள முதல் கேம்பிரிட்ஜ் ஆங்கில அங்கீகார நிலையமாக பிரிட்டிஷ் கவுன்சில் திகழ்கிறது. மேலும் கேம்பிரிட்ஜ் ஆங்கிலத் தகுதிகளுக்கான சந்தைத் தலைவராகவும் உள்ளது. இன்று வரை இலங்கை மற்றும் மாலைத்தீவில் 250க்கும் மேற்பட்ட பதிவு நிலையங்கள் கேம்பிரிட்ஜ் ஆங்கில பரீட்சைகளுக்கு பரீட்சார்த்திகளை தயார்படுத்துகின்றன. பங்குதாரர்கள் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் மாலைத்தீவில் உள்ள மூன்று தீவுகளிலும் பிரசன்னமாக இருக்கின்றனர்.
பிரிட்டிஷ் கவுன்சில்ஆனது இலங்கையில் உள்ள மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட UK தகுதியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் அதேவேளையில், ஆசிரியர் பயிற்சிபட்டறைகள் மற்றும் தகுதி விழிப்புணர்வு அமர்வுகள் மூலம் அதன் பதிவுபங்காளர்களை ஆதரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது நடப்பு நிதியாண்டான 2024-25 இல் மிகவும் உயரளவிலான கேம்பிரிட்ஜ் ஆங்கிலப் பரீட்சை தொகுதிகளைப் பதிவு செய்தது. எமது பதிவு நிலையங்கள் வழங்கிய குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு காரணமாக இது சாத்தியமானது. ஆசிரியர் பயிற்சி பட்டறைகள் மற்றும் தகுதி விழிப்புணர்வு அமர்வுகள் மூலம் எமது பதிவு நிலையங்கள் தமது வர்த்தகத்தை விருத்தி செய்வதற்கு நாம் தொடர்ந்து எமது ஆதரவினை வழங்கவுள்ள அதே வேளை இச்செயற்பாடானது பிரிட்டிஷ் கவுன்சிலின் UK தகைமை பெற விரும்பும் பல மாணவர்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். பதிவு நிலையங்கள் மூலம் வடக்கு முதல் தெற்கு வரையும் மற்றும் கிழக்கு முதல் மேற்கு வரையும் நாடளாவிய ரீதியில் உள்ள மாணவர்களுடன் நாம் தொடர்பில் உள்ளோம், என்று கேம்பிரிட்ஜ் ஆங்கிலத்திற்கான கணக்கியல் தொடர்பு மற்றும் பரீட்சைகள் பணிப்பாளர் – டொமினிக்ஹட்சன் தெரிவித்தார்.

