செய்திகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Apr 8, 2025 - 09:30 AM -

0

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

 

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

 

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்,

 

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்,

 

மு.ப. 11.00 - மு.ப. 11.30 - பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்,

 

மு.ப. 11.30 - பி.ப. 5.30,

 

(i) குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

(ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை - அங்கீகரிக்கப்படவுள்ளது

 

பி.ப. 5.30,
     
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 5 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், 3(ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளிற்கமைய, துர்நடத்தை மற்றும் பதவியின் தத்துவங்களை பாரதூரமாக துர்ப்பிரயோகம் செய்தமை காரணமாக, பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதி ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கு மேற்படி சட்டத்தின் 5 பிரிவின் பிரகாரம் விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கான தீர்மானம் பற்றிய அறிவித்தல் - விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.

 

பி.ப. 5.30 தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு

 

அதன் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்,
 

Comments
0

MOST READ
01
02
03
04
05