Apr 8, 2025 - 09:43 AM -
0
அமெரிக்காவிற்கு பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பு முறை நாளை (09) முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 54 விழுக்காடாக உயர்த்தப்பட உள்ளது.
அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் ஐ-போன் விலை 43 சதவீதம் வரை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிற்கு பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பு முறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 54 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
இதன்காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விலை 43 சதவீதம் வரை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ-போனுக்கான உதிரி பாகங்களில் பெரும்பகுதி சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதால் புதிய வரி விதிப்பின் காரணமாக அதன் விலை உயரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 68,000 ரூபாய்க்கு விற்பனையாகும் ஐ-போன் 16 பேஸ் மாடல் தொலைபேசி விலை இனி 1,28,000 ரூபாய்க்கு விற்பனையாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 1,37,000 ரூபாய்க்கு விற்பனையாகும் ஐ-போன் 16 Pro Max தொலைபேசி விலை 1,97,000 ஆயிரம் ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தொலைபேசி விற்பனை ஏற்கனவே மந்தமடைந்துள்ள நிலையில், டிரம்பின் புதிய வரி விதிப்பால் விற்பனை மேலும் சரியும் என்று கூறப்படுகிறது.