Apr 8, 2025 - 11:12 AM -
0
அமானா டகாஃபுல் லைஃப் இன்சூரன்ஸ் பிஎல்சி, தனது நீண்ட கால காப்புறுதிதாரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் கவர்ச்சிகரமான வருமதிகளை வழங்கியுள்ளது. அதனூடாக, காப்புறுதிதாரர்களுக்கான ஒப்பற்ற நிதிசார் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. நம்பிக்கையை வென்ற நீண்ட கால காப்புறுதிதாரரான அமானா லைஃப், காப்புறுதிதாரர்களுக்கு சிறந்த முதலீட்டு தெரிவுகளை வழங்குவதுடன், தமது நிதிசார் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் கட்டியெழுப்பிக் கொள்வதை உறுதி செய்கிறது.
நிறுவனத்தின் பரந்த, இடர்-தரப்படுத்தப்பட்ட முதலீட்டு தெரிவுகள் போன்றன நிலையான வைப்புகள், வங்கி முதலீடுகள், பங்குச் சந்தைகள் மற்றும் தங்க நிதியங்கள் போன்றவற்றில் மூலோபாய ரீதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதனூடாக இந்த சாதனையை எய்த முடிந்தது. இந்த கட்டமைப்பினூடாக, தமது நிதிசார் இலக்குகளுடன் பொருந்தும் நிதியங்களை சந்தை நிலைகளை பின்பற்றிதெரிவு செய்வதிலும் காப்புறுதிதாரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை சமநிலைப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. அவ்வாறான நெகிழ்ச்சித் தன்மையை வழங்கும் இலங்கையின் ஒரே ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனர் எனும் வகையில், அமானா லைஃப், வாடிக்கையாளர்களுக்கு தமது முதலீடுகளை செம்மைப்படுத்திக் கொள்ளவும், நீண்ட கால நிதிசார் உறுதித் தன்மையை பேணவும் வலுவூட்டுகிறது.
2024 டிசம்பர் 31ஆம் திகதியன்று, நிதியத்தின் மீளாய்வின் பிரகாரம், சகல முதலீட்டு பிரிவுகளிலிருந்தும் சிறந்த வருமதி பதிவாகியிருந்தமை வெளிப்பட்டிருந்தது. அதனூடாக, சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை எதிர்பார்ப்போருக்கான சிறந்த தெரிவாக அமானா லைஃப் அமைந்துள்ளமை மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலையான வைப்பு இருப்புடனான Protected Multiple Fund (PMF), அதன் நிதியப் பெறுமதியில் 90% ஐ கொண்டிருக்கும் நிலையில், உறுதியான வருமதிகளை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, கடந்த 24 மாதங்களில் இலங்கை அடிக்கடி வட்டி வீத விலைக்குறைப்புகளை பதிவு செய்திருந்த நிலையிலும், இந்த உயர் பெறுமதி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிலையான வைப்புகள் மீதான சந்தை வட்டி வீதங்கள் ஒற்றைப் பெறுமதிகளை எய்தியிருந்த நிலையில், வருடாந்த அடிப்படையில் PMF இனால் ஏற்படுத்தப்பட்ட வருமதிகள் குறித்த காலப்பகுதியில் 18.1% ஆக பதிவாகியிருந்தது.
அமானா டகாஃபுல் லைஃப் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெஹான் ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில், “அமானா லைஃப்பில், எமது நீண்ட கால காப்புறுதிதாரர்களுக்கு பாதுகாப்புடன், வெகுமதிகள் நிறைந்த முதலீட்டு வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். நாம் ஆயுள் காப்புறுதியை மாத்திரம் வழங்காமல், முறையாக கட்டமைக்கப்பட்ட நீண்ட கால நிதிசார் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியையும் வழங்குகிறோம் என்பதை இந்த பெறுபேறுகள் உறுதி செய்கின்றன. எவ்வாறாயினும், கடந்த கால வருமதிகள், எதிர்கால வினைத்திறனுக்கான உத்தரவாதங்களாக அமையாது என்பதை கவனத்தில் கொள்வதும் முக்கியமானதாகும். சந்தைச் சூழ்நிலைகள், எதிர்கால பெறுபேறுகளில் செல்வாக்குச் செலுத்தும்.” என்றார்.
நிலையான வைப்புகள் மற்றும் பங்குகள் ஆகியவற்றைக் கொண்டு இயங்கும் Growth Multiple Fund (GMF) ஊடாக கடந்த 12 மாதங்களில் 26.9% வருமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் பங்குப்பரிவர்த்தனைகளில் எழுந்த அதிகரிப்புடன், நீண்ட கால நிலையான வைப்புகள் உயர்ந்த வட்டி வீதங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளமை போன்றன 2024 ஆம் ஆண்டில் நிதியம் உறுதியான பெறுபேறை எய்த ஏதுவாக அமைந்திருந்தது. 2024 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், GMF இனால் கடந்த 24 மாத காலப்பகுதியில் வருடாந்த வருமதிகளில் 21.7% உயர்வு பதிவாகியிருந்தது. தேர்தலுக்கு பின்னரான பங்குப் பரிவர்த்தனை உயர்வு, Volatile Multiple Fund (VMF) க்கும் அனுகூலமளிப்பதாக அமைந்திருந்தது. இது 12 மாத வருமதியாக 30.6% ஐ பதிவு செய்திருந்தது.
2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலைகள் அதிகரித்திருந்த நிலையில், Bullion Multiple Fund (BMF) 12 மாத காலப்பகுதியில் 12.4% உயர்வையும், 36 மாத கால வருமதி 20.2% (வருடாந்த) உயர்வையும் பதிவு செய்திருந்தது. வரி விதிமுறைகளில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், Gold Investment Fund (GIF) 12 மாத காலப்பகுதியில் 6.0% வருமதியை பதிவு செய்திருந்தது.
வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை எனும் வழிமுறையுடன் அமானா லைஃப் இன்சூரன்ஸ், நீண்ட கால காப்புறுதிதாரர்கள் தமது அன்புக்குரியவர்களை பாதுகாப்பது மட்டுமன்றி, சிறந்த நீண்ட கால முதலீட்டு தீர்வுகளுடன் தமது செல்வதை பெருக்கிக் கொள்வதை உறுதி செய்கிறது. பிள்ளையின் கல்வி, ஓய்வூதியத் திட்டமிடல் அல்லது நீண்ட கால செல்வத் திரட்டு என எதுவாக இருந்தாலும், காப்புறுதிதாரர்களுக்கு தமது எதிர்கால எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் தமது நிதிசார் திட்டங்களை தீர்மானித்துக் கொள்ள இந்த அனுகூலம் பயனளிக்கிறது.
இலங்கையின் ஆயுள் காப்புறுதிக் கட்டமைப்பை அமானா டகாஃபுல் லைஃப் தொடர்ந்தும் மாற்றியமைத்து, நீண்ட கால காப்புறுதிதாரர்களுக்கு ஒப்பற்ற முதலீட்டு தெரிவுகளை வழங்கி, பரந்த நிதிசார் பாதுகாப்பை உறுதி செய்த வண்ணமுள்ளது. சிறந்த முதலீட்டு தெரிவுகளுக்கு மேலதிகமாக, அமானா லைஃப் இன்சூரன்ஸ் ஊடாக, தனிநபர் விபத்து காப்பீடு, பாரதூர நோய் காப்பீடு, வைத்தியசாலை அனுமதி காப்பீடு, வாழ்க்கைத் துணை ஆயுள் காப்பீடு மற்றும் Top-up பாதுகாப்பு போன்ற பெறுமதியான அனுகூலங்களையும் வழங்குகிறது. உயர் வருமதிகளை வழங்கல் தொடர்பில் உறுதியான பதிவுகளைக் கொண்டுள்ளதுடன், இந்த மேலதிக பாதுகாப்புகளினூடாக, பாதுகாப்பான மற்றும் சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்பிக் கொள்ள எதிர்பார்ப்போரின் ஒப்பற்ற தெரிவாக அமானா டகாஃபுல் லைஃப் அமைந்துள்ளது.