விளையாட்டு
கோபத்தில் விராட் கோலி

Apr 8, 2025 - 12:35 PM -

0

கோபத்தில் விராட் கோலி

ஐபிஎல் தொடரின் 20 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

 

அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ஓட்டங்கள் குவித்தது.

 

இதையடுத்து 222 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

 

இப்போட்டியின் 12 ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யாஷ் தயாள் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றனர். அப்போது இருவரும் மோதிக்கொண்டதால் கேட்சை தவறவிட்டனர்.

 

இதனால் கடுப்பான விராட் கோலி தொப்பியை கீழே வீசி தனது கோவத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து ஆர்சிபி அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05