Apr 8, 2025 - 01:40 PM -
0
இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த போக்குவரத்து நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தில் (CWIT) செயற்பாடுகளை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.
பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்ட CWIT, இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் SEZ லிமிடெட், முன்னணி இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பால் 35 ஆண்டு கட்டமைத்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் (BOT) என்னும் ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்படுகிறது.
CWIT திட்டம் USD800 மில்லியன் பெறுமதியான குறிப்பிடத்தக்க முதலீட்டைக் குறிப்பதுடன், முனையம் ஆண்டுதோறும் சுமார் 3.2 மில்லியன் இருபது அடி சமமான அலகுகளை (TEU) கையாளக்கூடிய 1,400m கப்பல்துறை நீளம் மற்றும் 20m ஆழத்தைக் கொண்டுள்ளது. சரக்கு கையாளும் திறன்களையும் கப்பல் திரும்பும் நேரத்தையும் மேம்படுத்தும் தெற்காசியாவின் முக்கிய ட்ரான்ஸ்ஷிப்மென்ட் (transshipment) மையமாக துறைமுகத்தின் நிலையை உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது,கொழும்பில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் முதல் ஆழ்கடல் முனையமாகும்.
2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள், தொடர்ந்து விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதிநவீன உட்கட்டமைப்பு நிறுவல் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், பிராந்திய கடல்சார் logistics இன் செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையில் புதிய அளவுகோல்களை அமைக்க CWIT தயாராக உள்ளது.
CWITஇல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படுவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பின் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. என அதானி குழுமத்தின் தலைவர் திரு. கௌதம் அதானி கூறினார். அவர் மேலும், இந்து சமுத்திர வர்த்தகத்தின் எதிர்காலத்தை இந்த முனையம் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் ஆரம்பம் இலங்கைக்கு ஒரு பெருமையான தருணமாகும். இது உலகளாவிய கடல்வழி போக்குவரத்து வரைபடத்தில் இலங்கையை உறுதியாக நிலைநிறுத்துகிறது. CWIT திட்டம் ஆனது உள்ளூரில் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதுடன் நாட்டிற்கு மகத்தான பொருளாதார மதிப்பை வழங்கவுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான ஆழமான வேரூன்றிய நட்பு மற்றும் வளர்ந்து வரும் மூலோபாய உறவுகளுக்கும், தொலைநோக்குப் பார்வை கொண்ட பொது - தனியார் கூட்டாண்மை மூலம் எதையும் அடைய முடியும் என்பதற்கும் இத்திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த உலகத்தரம் வாய்ந்த வசதியை குறித்த நேரத்தில் வழங்கியமை, உலகில் எங்கும் பெரிய அளவிலான முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் அதானி குழுமத்தின் நிரூபிக்கப்பட்ட திறனை பிரதிபலிக்கிறது. என்றார்.
பிராந்திய கடல்வழி போக்குவரத்து மையமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்தும் ஒரு திட்டமான மேற்கு கொள்கலன் முனையத்தின் வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம் என ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. கிருஷான் பாலேந்திரா கூறினார். இந்தத் திட்டம் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். மேலும் இலங்கையில் தனியார் துறையின் மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகும். இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதானி குழுமத்துடன் இணைந்து, கொழும்பின் அந்தஸ்தை ஒரு முன்னணி ட்ரான்ஸ்ஷிப்மென்ட் மையமாக உயர்த்துவோம். இந்தத் திட்டம் பிராந்தியத்தில், உலகளாவிய வர்த்தகம் மற்றும் தொடர்பை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார்.
அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் தொடர்பாக உலகளவில் பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் ஒரு பகுதியான, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), ஒரு துறைமுக நிறுவனத்திலிருந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து பயன்பாடாக உருவெடுத்து, அதன் துறைமுக வாயிலிலிருந்து வாடிக்கையாளர் வாயிலுக்கு முழுமையான தீர்வுகளை வழங்குகிறது. மேற்கு கடற்கரையில் 7 மூலோபாய ரீதியாக அமைந்துள்ள துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் (காண்ட்லாவிலுள்ள முந்த்ரா, டுனா டெக்ரா மற்றும் பெர்த் 13, குஜராத்தில் தஹேஜ் மற்றும் ஹசிரா, கோவாவில் மோர்முகாவோ, மகாராஷ்டிராவில் டிகி மற்றும் கேரளாவில் விழிஞ்சம்) மற்றும் கிழக்கு கடற்கரையில் 8 துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் (மேற்கு வங்கத்தில் ஹால்டியா, ஒடிசாவில் தம்ரா மற்றும் கோபால்பூர், ஆந்திராவில் கங்காவரம் மற்றும் கிருஷ்ணபட்டணம், தமிழ்நாட்டில் காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் மற்றும் புதுச்சேரியில் காரைக்கால்) ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக மேம்படுத்துனர் மற்றும் செயற்பாட்டாளராக நாட்டின் மொத்த துறைமுக அளவுகளில் 27%ஐ பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால் கடலோரப் பகுதிகள் மற்றும் உள்நாட்டிலிருந்து அதிக அளவு சரக்குகளைக் கையாளும் திறன்களை வழங்குகிறது. இந்நிறுவனம் இலங்கையின் கொழும்பில் ஒரு சரக்கு மாற்றும் (transshipment) துறைமுகத்தையும் உருவாக்கி வருகிறது. மேலும் இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்தையும் தான்சானியாவின் டார் எஸ் சலாம் துறைமுகத்தில் கொள்கலன் முனையம் 2ஐயும் இயக்கி வருகிறது. துறைமுக வசதிகள், ஒருங்கிணைந்த logistics திறன்கள், பல்வகை logistics பூங்காக்கள், Grade A பண்டகசாலைகள் மற்றும் தொழில்துறை பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய துறைமுகங்கள் முதல் logistics தளம், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படவுள்ள மாற்றத்திலிருந்து இந்தியா பயனடையும் வகையில் அதற்கு சாதக நிலையை உருவாக்குகிறது. அடுத்த தசாப்தத்தில் உலகின் மிகப்பெரிய துறைமுகங்கள் மற்றும் logistics தளமாக மாறுவதே நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி தொடர்பாக (JKH)
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH), 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 80 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. 155 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 16,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன் LMD சஞ்சிகையால் கடந்த 19 ஆண்டுகளாக இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்காவின் கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை பட்டியலில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தது. உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) முழுமையான அங்கத்தவராகவும் UN Global Compact இன் பங்கேற்பாளராகவும் இருக்கும் JKH ஆனது, நாளைய தினத்திற்கான தேசத்தை மேம்படுத்துதல் எனும் அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) தூரநோக்கை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசடைவை கணிசமாகக் குறைப்பதில் ஊக்கியாக உள்ள சமூக தொழில்முனைவோர் முயற்சியான Plasticcycle திட்டம் ஊடாகவும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
For more information, please visit www.adaniports.com
For media queries, please contact: Roy Paul | roy.paul@adani.com
For Investor queries, please contact: Rahul Agarwal | apsezl.ir@adani.com