Apr 8, 2025 - 01:43 PM -
0
NDB வங்கியானது தொடர்ச்சியாக நான்காவது வருடமாக திரித்துவக்கல்லூரி ரக்பியுடன் தனது பங்குடைமையைத் தொடர்வதில் பெருமிதம் கொள்ளும் அதேவேளை இம்முறை 2025 பாடசாலைகள் ரக்பி பருவத்திற்கான உத்தியோகப்பூர்வ வங்கி பங்குதாரராக இணைந்து கொள்ளவுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பானது இலங்கையின் விளையாட்டு சிறப்பிற்கும் இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கும் NDB இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய NDB வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரியான கெலும் எதிரிசிங்க, “ரக்பி என்பது வெறும் விளையாட்டை விட மேலானதாகும்.இது ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் குழுப்பணிக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. NDB இல் நாம் இவ்விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் ஆற்றலில் வரம்புகளைத் தாண்டி சிறந்து விளங்கும்போது 2025 பாடசாலைகள் ரக்பி பருவத்திற்கான உத்தியோகப்பூர்வ வங்கி பங்குதாரராக `அவர்களுக்குப் பின்னால் நிற்பதில் நாம் பெருமைப்படுகிறோம். இலங்கையின் இளைஞர்கள் தங்கள் முழு திறனையும் அடைவதற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக நாம் தொடர்ந்து பணியாற்றுவதால், எமது அர்ப்பணிப்பானது குறிக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் பரந்து விரிந்துள்ளது.”
NDB வங்கியானது விளையாட்டின் நீண்டகால ஆதரவாளராக, வங்கியின் சொந்த மீள்எழுச்சி மற்றும் முன்னேற்ற நெறிமுறைள் ஆகிய அம்சங்களுடன் இணங்கும் பாடசாலை ரக்பியை வரையறுக்கும் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை அங்கீகரிக்கிறது. திரித்துவக் கல்லூரியானது வரவிருக்கும் ஒரு அற்புதமான பருவத்திற்கு தயாராகி வருவதால், NDB வங்கி அவர்களுடன் இணைந்து நிற்பதில் மகிழ்ச்சி அடைவதுடன் இளம் விளையாட்டு வீரர்கள் தமது எல்லைகளைத் தாண்டி சிகரத்தை தொடுவதற்கு தேவையான சக்தியினை அளிக்கிறது.
NDB வங்கியானது விளையாட்டு உலகில் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், நாட்டின் இளைஞர்களை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து உறுதியாக உள்ளது. ரக்பி பருவம் தொடங்கும்போது, களத்தில் திறமை, ஆர்வம் மற்றும் உறுதிப்பாட்டின் எழுச்சியூட்டும் வெளிப்பாட்டைக் காண்பதற்கு வங்கி ஆவலுடன் காத்திருக்கிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.