Apr 8, 2025 - 02:37 PM -
0
நாட்டிற்கு பல வருட இடைவெளிக்குப் பின்னர் புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு கவர்ச்சிகரமான லீசிங் திட்டம் மூலம் ஆதரவளிக்கவுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.
2025 மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பெறப்படும் லீசிங் வசதிகளுக்கு, சிறப்பு வட்டி வீதங்கள், தனிப்பயனாக்கப்பட்ட கட்டணத் திட்டங்கள், முதல் ஆண்டு காப்புறுதி கட்டணங்களில் கழிவு, கடன் கடிதங்கள் திறக்கப்படும்போது குறைந்தபட்சம் ரூ. 10,000 தரகு கட்டணத்தில் 50மூ கழிவு, இணைவு கட்டணத்துடன் முதல் ஆண்டு வருடாந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்ட இலவச கடனட்டை ஆகியவற்றை வழங்கவுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வாடிக்கையாளர்களுக்கு லீசிங் வசதிகளுக்கான விரைவான மற்றும் தொந்தரவு இல்லாத ஒப்புதல் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு சிறப்பு விலைக்கழிவுகள் ஆகியவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்படாத வாகனங்களின் லீசிங் வசதிகளுக்கு இந்த சிறப்பு சலுகைகள் பொருந்தும்.
கொமர்ஷல் வங்கியானது, வாகன குத்தகைகளில் மிகக் குறைந்த வாடகையாக அதாவது ஒவ்வொரு ரூ.100,000 க்கும் ரூ.1,598 என்ற ரீதியில் 7 வருடங்களுக்கு இந்த லீசிங் வசதியை வழங்குகிறது. கொமர்ஷல் வங்கியின் சூப்பர் லீசிங் மற்றும் ஹைப்ரிட் லீசிங் போன்ற லீசிங் வசதிகள் மூலம், தனிப்பட்ட வருமான முறைகளுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் தெரிவுகளை கொமர்ஷல் வங்கி லீசிங் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.