Apr 8, 2025 - 05:17 PM -
0
சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனமானது இலங்கையில் தனது முதலாவது சுயமான உபகரண உற்பத்தியாளர் (OEM) பங்குடைமையில் நுழைந்து ஆறு ஆண்டுகள் ஆகும் நிலையில், நாட்டின் வளர்ந்து வரும் வாகன சாதனங்களை பொருத்தும் துறையில் பெறுமதி மிக்க பங்களிப்பினை வழங்கி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் சியெட் டயர்கள், தற்போது இலங்கையின் வாகன பொருத்தல் துறையில் 11 வர்த்தகநாம வாகனங்களில் சுயமானதும் அசலானதுமான டயர்களாக திகழ்கின்றன.இதற்கிணங்க இவை விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் (SUVகள்), கார்கள், பேருந்துகள், லாரிகள், பிக்-அப் ட்ரக்குகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் வரையில், பயன்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டயர்களில் பல வாகன உற்பத்தியாளர்களின் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 30க்கும் மேற்பட்ட வாகன மாதிரிகளுக்கு பொருந்துவதாக உள்ளன. இவற்றில் 16 பஸ் மாதிரிகள் மற்றும் இலங்கையில் தற்போது பொருத்தப்பட்டு வரும் ஐந்து மோட்டார் சைக்கிள் மாதிரிகள் அடங்குகின்றன.
சியெட் களனி நிறுவனமானது தற்போது உள்நாட்டு வாகன சாதனங்களை பொருத்தும் துறைக்கு ஆண்டுதோறும் 150,000 க்கும் மேற்பட்ட சுயமான மற்றும் அசலான உபகரண (OE) டயர்களை வழங்குகிறது, இது இலங்கையில் பொருத்தப்படும் வாகனங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை உள்ளடக்கியதாகும். மேலும் OE பிரிவு டயர்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் சியெட் வர்த்தகநாம டயர்களில் 12% ஆக திகழ்கின்றன. சியெட் போன்ற ஒரு உற்பத்தி வர்த்தக நாமத்துடன் மேற்கொள்ளப்பட்ட OEM பங்குடைமையானது அனைத்து டயர் பயனர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் அவை வாகன உற்பத்தியாளர்கள் தயாரிப்புகளின் தரம் மற்றும் செயல்திறன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன, என்று சியெட் களனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு. ஷமல் குணவர்தன தெரிவித்தார். இந்த பங்குடைமையானது நிபுணர்களின் கடுமையான மதிப்பீடுகளின் அடிப்படையிலும் மேலும் ஒவ்வொரு வகை வாகனங்களின் தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் சியெட்டின் திறனின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.
சியெட் ஆனது OEM திட்டங்கள் மூலம், அதன் சொந்த உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதுடன் உலகளாவிய தராதரங்களுடனும் இணங்குகிறது, மேலும் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிப்புகளை வடிவமைக்கிறது, என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் சுயமான அசல் உபகரணங்களாக சியெட் டயர்களைத் தேர்ந்தெடுத்த வாகன வர்த்தகநாமங்களில் ஹூண்டாய், JAC, JMC, DFSK, மஹிந்திரா, மைக்ரோ, டாடா, லங்கா அசோக் லேலேண்ட், TVS, பஜாஜ் மற்றும் டைனோ ஆகியவை அடங்குகின்றன.
இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சத வீதத்தை உற்பத்தி செய்யும் சியெட் கூட்டு முயற்சியில் இலங்கையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 8.5 பில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதன் உற்பத்திகளில் சுமார் 20 வீதத்தை உலகின் 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு அந்நிய செலவாணிகளை சேகரிக்கும் விடயத்திலும், இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீதான சார்பு நிலையிலிருந்து விடுவிற்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றது.