Apr 8, 2025 - 05:44 PM -
0
கேகாலை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர அவர்களது மறைவினால் அரசியலமைப்பின் 66(அ) உறுப்புரையின் பிரகாரம் 2025 ஏப்ரல் 06 ஆம் திகதியிலிருந்து பாராளுமன்றத்தின் உறுப்புரிமையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று (08) அறிவித்துள்ளார்.
அதற்கமைய, அவர்களது மறைவு தொடர்பில் அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, இந்த உறுப்பினரின் குடும்பத்தினருக்கு பாராளுன்றம் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன், இது தொடர்பான அனுதாபப் பிரேரணை பிறிதொரு தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதி சபாநாயர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

