விளையாட்டு
பாஜக-வில் இணைந்த முன்னாள் நட்சத்திர வீரர்

Apr 8, 2025 - 06:02 PM -

0

பாஜக-வில் இணைந்த முன்னாள் நட்சத்திர வீரர்

இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் கேதர் ஜாதவ். இவர் இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிகளில் பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு வகையில் சிறப்பாக விளையாடியவர்.

 

இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடி வந்தார். கடந்த 2021 வரை சென்னை அணிக்காக விளையாடிவர். அணி தலைவர் தோனியின் நம்பிக்கைக்கு உரிய ப்ளேயராக இருந்தார். பின்னர் Unsold ப்ளேயர் ஆனார்.

 

இதனையடுத்து கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் கேதர் ஜாதவ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த விழாவில் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர் பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவின் துண்டு கேதர் ஜாதவிற்கு அணிவிக்கப்பட்டது. அவருக்கு பாஜக உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05