Apr 8, 2025 - 06:04 PM -
0
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது, இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேணைக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக எவ்வித வாக்குகளும் பதிவாகவில்லை என்பது சிறம்பம்சமாகும்.

