Apr 9, 2025 - 10:51 AM -
0
தமிழ் சினிமாவில் நடிகைகளைச் சுற்றி அவர்களுக்கு உதவியாக, அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் முகவர்களாக, மேக்கப் கலைஞர்களாக, ஆடை அளவு எடுப்பவர்களாக, புடவை கட்டிவிடுபவர்களாக, பார்ட்டிகளுக்கு உடன் அழைத்துச் செல்பவர்களாக ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் காணப்படுவது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது.
இதற்கு பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சான்றாக அமைந்துள்ளன. இந்நிலையில், பிரபல நடிகை ஷகிலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதற்கான காரணத்தை தனது பார்வையில் விளக்கியுள்ளார். ஆனால், அவரது கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஷகிலாவின் கூற்றுப்படி, நடிகைகள் தங்களைச் சுற்றி ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு. பொதுவாக ஆண்கள், நடிகைகளுடன் நெருக்கமாக பழகும்போது, ஒரு கட்டத்தில் அவர்கள்மீது ஆர்வமோ, ஆசையோ அடக்க முடியாமல் தவறாக நடந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பொறுத்தவரை, நடிகைகள் அவர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், படுக்கையறை வரை சென்றாலும், அவர்கள் உணர்ச்சிவசப்படுவதோ அல்லது ஆசைப்படுவதோ இல்லை என்று ஷகிலா வாதிடுகிறார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பொதுவாக பெண்களைப் பார்த்தாலே வெறுப்படையும் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு, நடிகைகள் மீது மட்டும் எப்படி ஆர்வம் வரும்? அவர்களிடம் ஆண்மைத்தன்மை இல்லாவிட்டாலும், ஆண்களைப் போல உடல் வலிமை உள்ளது. இதனால், நடிகைகளுக்கு பாதுகாப்பு உணர்வை அளிப்பதோடு, தவறான நோக்கங்களும் வராது," என்று விளக்கினார்.
இந்தக் காரணங்களால் தான் நடிகைகள் தங்களைச் சுற்றி ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஷகிலாவின் இந்தக் கருத்துகள் வெளியானதும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் "என்ன கன்றாவி இது? காது கூசுது," "இப்படியெல்லாமா நடக்குது?" என பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.