வணிகம்
Prime Lands Residencies PLC தனது பணிப்பாளர் சபைக்கு சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்களை நியமித்துள்ளது

Apr 9, 2025 - 12:41 PM -

0

Prime Lands Residencies PLC தனது பணிப்பாளர் சபைக்கு சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்களை நியமித்துள்ளது

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளராகத் திகழும் Prime Lands Residencies PLC, தனது பணிப்பாளர் சபையின் அங்கத்தவராக சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமிப்பதற்கு 2025 மார்ச் 27 ஆம் திகதி பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. 

பொருளாதாரம், ஆளுகை மற்றும் கூட்டாண்மை மூலோபாயம் ஆகிய விடயங்கள் தொடர்பில் பரந்த அனுபவத்தை பேராசிரியர் அமரதுங்க கொண்டிருப்பதுடன், இலங்கையின் சொகுசான வாழிட அனுபவத்தை மாற்றியமைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி திட்டங்களை Prime Lands Residencies PLC முன்னெடுக்கும் நிலையில், இவரின் நியமனம் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நன்மதிப்பு பெற்ற கல்விமானும் நிர்வாகியுமாக திகழும் பேராசிரியர் அமரதுங்க, தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார பொருளாதார சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் தவிசாளராக திகழ்கிறார். இவர் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். 

பேராசிரியர் அமரதுங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொருளாதார BA (Hons.) பட்டம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார MA பட்டம் மற்றும் சாகா தேசிய பல்கலைக்கழகத்தின் கிராமிய அபிவிருத்திக்கான பொருளாதார MSc பட்டம் மற்றும் ஜப்பானின், ககோஷிமா தேசிய பல்கலைக்கழகத்தின் Ph.D. பட்டம் ஆகியவற்றை பெற்றுள்ளார். இவரின் கல்விசார் பங்களிப்புகள் 75க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் குறிப்பைப் பெற்றுள்ளன. 

இலங்கை மற்றும் ஜப்பான் உறவுகளை கட்டியெழுப்புவதில் இவர் ஆற்றியிருந்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டில் ‘Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon’ எனும் உயர் கௌரவிப்பை ஜப்பானிய ராஜா பேராசிரியர் அமரதுங்க அவர்களுக்கு வழங்கியிருந்தார். 

பேராசிரியர் அமரதுங்க அவர்களின் கூட்டாண்மை அனுபவங்களில், பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத முன்னணி நிறுவனங்கள் பலதின் பணிப்பாளர் சபைகளில் சுயாதீன பணிப்பாளராக பணியாற்றியுள்ளமை அடங்கியுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05