Apr 9, 2025 - 01:29 PM -
0
ஆசிய பசுபிக் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம் (APIDM) தமது டிஜிட்டல் டிரிவன் மார்க்கெட்டிங் டிப்ளோமா பாடநெறியை முதல் தடவையாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு டிப்ளோமா பட்டமளிக்கும் வைபவத்தை அண்மையில் நடாத்தியுள்ளது. மேற்படி டிப்ளோமாதாரிகளின் பெரும்பாலானோர் இலங்கையில் துரிதமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பட்டமளிப்பு வைபவம் அதன் பிரதம அதிபதியான திரு தர்சன ஜயசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டில் eBusiness Academy எனும் பெயரில் தொடங்கப்பட்ட APIDM (www.apidm.asia) ஆசியா பிராந்தியம் முழுவதுமாக டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொழில் வல்லுனர்களை வலுவூட்டுவதில் முதன்மை நிறுவனமாக திகழ்கிறது.
APIDM இலங்கை, வங்காளதேசம், கம்போடியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தொழில் வல்லுனர்களை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திறன்களால் வலுவூட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் டிரிவன் மார்க்கெட்டிங் டிப்ளோமா முறைசார் கல்விக்கும் தொழில் புரிதலுக்குமிடையிலான இடைவெளியை நிரப்புகிறது. இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்டுள்ள இந் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் உயர் தர தகைமையை பெற்றுள்ள இளைஞர் யுவதிகளுக்கு செய்முறை மற்றும் கைத்தொழில்துறையை மையப்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது.
“APIDM இன் நாம் வெறுமனே டிப்ளோமா பாடநெறியை மாத்திரம் வழங்குவதில்லை. டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உயர்திறனின் மூலம் எதிர்காலத்துக்கு தயாராகவுள்ள தொழில் வல்லுனர்களை உருவாக்குவதே எமது நோக்கமாகும். முதலாவது டிப்ளோமாதாரிகள் இத் துறையில் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைப்பதை காண்பதே எமது எதிர்பார்ப்பாகும். இது இலங்கையின் அடுத்த தலைமுறையின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தலைவர்களை உருவாக்கும் பயணத்தின் தொடக்கப்புள்ளியே” என APIDM பிரதம நிறைவேற்று அதிகாரி திரு அமித அமரசிங்க தெரிவித்தார். “சகல டிப்ளோமாதாரிகளுக்கும் அவர்களின் தொழில்முறை பயணத்தை ஆரம்பிப்பதற்கு எமது வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம். இந் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பெற்ற அறிவு மற்றும் திறன்களுடன் அவர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பயன்மிக்க பங்களிப்பை வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம்.” என பீனிக்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் சிரேஷ்ட முகாமையாளர் திரு தரிந்து கருணாரத்ன தெரிவித்தார்.
போட்டி டிஜிட்டல் உலகின் வெற்றிக்காக மாணவர்களை தயார்படுத்தவும், கைத்தொழில்துறைக்கு ஏற்புடைய கல்வியை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் APIDM நிறுவனம் உறுதியுடன் இயங்கி வருகிறது.