Apr 9, 2025 - 01:34 PM -
0
சகலருக்கும் தரமான சுகாதார சேவையை பெறுவதற்கும் உற்சாகமான ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கு தேவையான அறிவை பெறுவதற்குமான வாய்ப்பு இருக்க வேண்டுமென்பதை தமது சமூகப் பொறுப்பாக கொண்டுள்ள Fadna நிறுவனம் அப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் தமது 50 ஆவது Fadna விடியல் மருத்துவ முகாமை அண்மையில் பன்னிபிடிய ஸ்ரீ தெவ்ரம் மஹா விஹாரையில் வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. Fadna விடியல் மருத்துவ முகாமில் சுகாதார சேவைகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
உள்நாட்டு வர்த்தக நாமங்கள் மத்தியில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தேசத்தின் நல்லிருப்புக்கு பங்களிப்பு செய்துள்ள Fadna தமது சமூகப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தம்மை அர்ப்பணித்துள்ள புகழ்மிக்கதொரு இலங்கை வர்த்தகநாமமாகும். 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Fadna விடியல் திட்டத்தின் மூலம் இதுவரை நாடெங்கிலும் 50 மருத்துவ முகாம்களை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. Fadna விடியல் திட்டத்தின் மூலம் இலங்கை சமூகத்துக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தமையிட்டு தாம் பெருமிதம் கொள்வதாக Fadna நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு சமேந்திர சோமதுங்க 50 ஆவது விடியல் நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.
Fadna விடியல் மருத்துவ முகாமுக்கு கொழும்பு டர்டன்ஸ் மருத்துவமனை இணை அனுசரணை வழங்கியதோடு தெவ்ரம் வேஹேர பௌத்த வழி அமைப்பு அதன் நிகழ்ச்சி ஏற்பாட்டு பணிகளுக்கு உறுதுணையாக இருந்தது. Fadna தமது சமூகப் பொறுப்பை முதன்மையாக கொண்டு எதிர்காலத்திலும் இவ்வாறான மருத்துவ முகாம்களை நடாத்துவதன் மூலம் சமூக நல்லிருப்பை தொடர்ந்தும் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் விரிவாக்கம் மற்றும் சேவை விஸ்தரிப்பின் மூலம் ஆரோக்கியமானதும் வலுவானதுமான இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதே பட்னா நிறுவனத்தின் நோக்கமாகும்.