Apr 9, 2025 - 01:38 PM -
0
35 ஆண்டு கால மக்கள் நம்பிக்கையை வென்ற இலங்கையின் முன்னணி வாடகை வாகனச் சேவை நிறுவனமான Kangaroo Cabs நிறுவனம் புதியதொழில்நுட்பத்தின் உதவியுடன் இலங்கையின் முதலாவது Tap to pay செலுத்துகை முறைமையை கொண்ட வாடகை வாகனச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் முலம் வாடிக்கையாளர்களுக்கு தமது Visa அல்லது Master Card வசதிகளுடன் கூடிய Smart கையடக்கத் தொலைபேசிக்கு Tap செய்வதன் மூலம் இலகுவாகவும் துரிதமாகவும் கட்டணங்ளை செலுத்த முடியும். நாணயத் தாள் பாவனை மற்றும் இயந்திர பயன்பாட்டை தாண்டி முறையானதும் புத்தாக்கமிக்கதுமான கட்டண செலுத்துகை முறைமையொன்று இதன் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. “இந்த ஒத்துழைப்பு நீண்டதொரு படிநிலை ஆகும். Tap to pay மூலம் புதிய கட்டண செலுத்தகை முறையொன்று அறிமுகப்படுத்தப்படுவதுடன் நின்றுவிடாது சாரதிகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களிடமிருந்து கிடைக்கும் சேவையினை மேலும் வலுவூட்டுவதற்கும் இது பயன்படுத்தப்படும். இந்தச் சேவை கட்டணச் செலுத்துகைகளை இலகுபடுத்துதோடு துரிதப்படுத்துகிறது.
எந்த வகையான பயணமாக இருந்தாலும் அந்தந்த வகையில் விபரங்களை உள்ளிட்டு இலகுவாக வாடகை வாகனமொன்றை ஒதுக்கிக்கொள்ள முடியும். இடைவிடாத சேவைகளை வழங்கும் தொலைபேசி அழைப்பு நிலையமொன்று வாடிக்கையாளர்களின் நலன் கருதி செயற்படுத்தப்படுவதோடு இற்றைப்படுத்தப்பட்ட இணையதளத்தின் ஊடாக சிறப்பான சேவையினை வழங்குவதன் மூலம் Kangaroo Cabs பாதுகாப்பான,சௌகரியமான பயணத்துக்கு உறுதுணை அளிக்கிறது. Genie Business இன் கூட்டிணைவுடன் Kangaroo Cabs வினைத்திறனுடன் சுயமாக கட்டண அறவீட்டை மேற்கொள்வதோடு நேரத்தை மீதப்படுத்தவும், சரியான கட்டண விபரங்களை தெரிவிக்கவும் உதவுகிறது.” என Kangaroo Cabs நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளர் திரு குசல் பொன்சேகா தெரிவித்தார். www.kangaroocabs.com இணையதளத்தின் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் வாடகை வாகனங்களை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
மேலும் Kangaroo Cabs Miles ஐ அறிமுகப்படுத்தி அன்றாட வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கும் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிக்கும் ஒவ்வொரு மைல் தூரத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய் சேரும் வகையில் Kangaroo Cabs Miles திட்டம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி செயற்படுத்தப்படுகிறது.