Apr 9, 2025 - 01:42 PM -
0
Dearo Investment Ltd தமது வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதியை வழங்குவதற்கு செலிங்கோ ஜெனரால் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் இந் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் சகல வாடிக்கையாளர்களும் காப்புறுதி செய்யப்படுவார்கள்.
வாடிக்கையாளர்களின் நலன் கருதிய Dearo Investment Ltd நிறுவனத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மீண்டும் உறுதியாகின்றது. மேற்படி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான பிரசன்ன சஞ்சீவ, தலைமை தொழிற்பாட்டு அதிகாரி நிரஞ்சன் வர்ணசூரிய மற்றும் செலிங்கோ ஜெனரால் இன்சூரன்ஸ் கம்பனியின் பொது முகாமையாளர் எஸ். திலகேஷ், உதவிப் பொது முகாமையாளர் வீ.கே. குணதிலக, பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.ஜீ.சீ. குணரத்ன, சிரேஷ்ட சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி கேசர ஹசுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Dearo Investment Ltd தனியார் மற்றும் வணிக நிதிச் சேவைகள், கடன், முதலீட்டு வாய்ப்புகள் என பல்வேறு சேவைகளை வழங்குகிறது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டு தொழில்முயற்சிகள் மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் தொழில் முயற்சிகளுக்கு தேவையான நிதி வசதிகளை அளித்தல், தற்போதுள்ள தொழில்முயற்சிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்கு தேவையான தொழில்முயற்சி கடன்களை அளித்தல் இந் நிறுவனத்தின் பிரதான சேவைகளில் அடங்கும். வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமானதும் வினைத்திறன்மிக்கதுமான நிதித் தீர்வுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் பணியாட்டொகுதியொன்றின் ஊடாக இச் சேவைகள் வழங்கப்படுகின்றன. 30 இற்கு மேற்பட்ட கிளைகளுடன் இயங்கும் Dearo Investment எதிர்காலத்தில் மேலும் பல கிளைகளை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
தற்பொழுது இந் நிறுவனம் நிதிச் சேவைகள், வணிக மற்றும் சட்டம் சார்ந்த சேவைகள், உணவு பானங்கள், சுற்றுலா, கல்விச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வாகனங்கள், கமத்தொழில், பெருந்தோட்டத்துறை என பல்வேறு துறைகளுக்கு வியாபிக்கும் வகையில் தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. வங்கியியல் மற்றும் நிதித் துறையில் 15 ஆண்டு கால அனுபவத்தை கொண்டுள்ள திரு பிரசன்ன சஞ்சீவவின் தலைமையின் கீழ் Dearo Investment நிதித் துறையில் பெரும் நம்பிக்கை மிக்க நிறுவனமாக தடம் பதித்துள்ளது. அந் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களான பிரபாஷ் குணரத்ன, உப்புல் எதிரிசூரிய, தரிந்து தனஞ்சய சமரவிக்கிரம, நிரஞ்சன வர்ணசூரிய, திலினி கல்ஹார ஏக்கநாயக்க ஆகியோர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர்.