Apr 9, 2025 - 03:26 PM -
0
இலங்கையில் காப்புறுதி துறையில் சந்தைத் தலைமைத்துவத்தை வகிக்கும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமான சாதனையாளர்களை கௌரவிக்கும் இரு நாள் நிகழ்வினை நடத்தியது. கொழும்பின் புதிய மிகவும் பிரமாண்டமான ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு இடமான சினமன் லைஃப்பில் இந்த சிறப்பு கொண்டாட்ட நிகழ்வானது இடம்பெற்றது.
செலிங்கோ லைஃப்பின் அதிசிறந்த சாதனையாளர்கள் தினம் மற்றும் வருடாந்த விருதுகள் விழாவை இணைத்ததாக இடம்பெற்ற இந்நிகழ்வில், முதல் நாளன்று நிறுவனத்தின் சிறந்த செயல்திறன் கொண்ட 250க்கும் மேற்பட்ட உயர் சாதனையாளர்களான விற்பனை அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர், மேலும் இரண்டாவது நாளில் அவர்களின் விற்பனை சாதனைகளுக்காக வாகனம் உட்பட 350 விருதுகளைப் பெற்றனர்.
இரண்டு நாள் நிகழ்வுகளிலும் சிறந்த விருந்துபசாரம் வழங்கப்பட்டதுடன் மற்றும் அற்புதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றன, மேலும் கௌரவிக்கப்பட்டவர்களுக்கு சினமன் லைஃப் நிறுவனத்தில் இரவு தங்குமிட வசதியும் வழங்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
செலிங்கோ லைஃப் பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் இரு நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்றனர், மேலும் சாதனையாளர்களுக்கு முடி சூட்டுதல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற வருடாந்த விருதுகள் வழங்கலில், சுவிஸ் ரீ நிறுவனத்தின் சீனா தவிர்ந்த ஆசிய பசுபிக் நாடுகளுக்கான ஆயுள் மற்றும் மருத்துவ மீள் காப்புறுதி பிரிவின் தலைவர் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளர் திருமதி டெய்சி நிங் பிரதம விருந்தினராகவும், சுவிஸ் ரீ நிறுவனத்தின் இந்திய சந்தைகளின் ஆயுள் மற்றும் மருத்துவப்பிரிவின் தலைவர் திருமதி சுனயனா மகான்சாரியா கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
செலிங்கோ லைஃப்பின் இந்த வருடாந்த விருதுகளில் சிறந்த விருதுகளை வென்றவர்கள் சிறந்த முகவர் தலைவர் - திரு. எம்.மனோஜன்; சிறந்த முகவர் மேற்பார்வையாளர் - திருமதி. எஸ். ராகினி; சிறந்த ஆயுள் காப்புறுதி ஆலோசகர் - திரு. ஏ. ஐ. பி.மஞ்சுள் மற்றும் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளர் - திருமதி. ஜே.மீரா. 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்பீட்டு சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.