Apr 9, 2025 - 03:38 PM -
0
விஜய் டிவியின் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி 'லொள்ளு சபா'வில் நடித்த ஜேசு கடந்த ஆண்டு காலமானார். இப்போது, அந்த குழுவில் இருந்த மற்றொரு முக்கிய நடிகர் சபா ஆண்டனியின் மரண செய்தி திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சி ஒரு காலத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. சந்தானம், சுவாமிநாதன், ஜீவா, பாலாஜி, மனோகர், சேஷூ, மாறன், ‘சிறகடிக்க ஆசை’ பழனியப்பன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகினர்.
இந்த நிலையில் லொள்ளு சபா சேஷு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து, இன்று அதே நிகழ்ச்சியில் இடம்பெற்ற சபா ஆண்டனியும் காலமானார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபா ஆண்டனி 'லொள்ளு சபா'வின் வாயிலாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர். பின்னர் சந்தானம் நடித்த பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக ’தம்பிக்கோட்டை’ திரைப்படத்தில், சந்தானத்தின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார்.
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சபா ஆண்டனிக்கு சிகிச்சை செலவுக்காக சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நிதியுதவி செய்தனர்.
இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு திரையுலகினர், சின்ன திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.