Apr 9, 2025 - 03:50 PM -
0
கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சமந்த ரணசிங்க 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளராக செயற்பட்டார்.

