Apr 9, 2025 - 04:28 PM -
0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இரு நாடுகளுக்கான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று (08) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்தா வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தர்லிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி சிவப்பிரகாசம், அமைச்சின் இணைப்புச் செயலாளர் வசந்தமூர்த்தி ஆகியோர்கள் உட்பட இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அமைச்சின் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
--