Apr 9, 2025 - 04:46 PM -
0
பாலிவுட்டில் வெளிவந்த முன்னா பாய் படத்தின் தமிழ் ரீமேக் தான் வசூல் ராஜா MBBS. இப்படத்தை சரண் இயக்கத்தில் கமல் ஹாசன், சினேகா, பிரபு, நாகேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் ரசிகர்கள் அனைவராலும் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று சாம்பு மவன் கேரக்டர் தான். இவர் சுவாமிநாதன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், கமல் இவரை சாம்பு மவனே என அழைத்து தான் மக்களிடையே பதிவானது.
படம் முழுவதும் What is The procedure to Change the Room என பேசிய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். வசூல் ராஜா படத்திற்கு பின் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
அவருக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.திரைப்படம் டிக்கெட் முன்பதிவு இந்த நிலையில் அவர் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இணையதளம் ஒன்றில் ரசிகர் ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகரின் பெயர் என்னவென்று கேட்டு இருந்தார்.
அதற்கு மற்றொரு ரசிகர், "அந்த நடிகர் எனது சகோதரரின் கிளாஸ் மெட் தான். அவர் பெயர் ரத்தின சபாபதி. சாலை விபத்தில் இறந்துவிட்டார்" என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.