செய்திகள்
இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Apr 10, 2025 - 07:11 AM -

0

இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித் சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காவத்தமுனை பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இவ் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05