வணிகம்
Sun Siyam பாசிகுடாவின் சூரியக் கொண்டாட்டத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடுங்கள்

Apr 10, 2025 - 12:45 PM -

0

Sun Siyam பாசிகுடாவின் சூரியக் கொண்டாட்டத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடுங்கள்

இந்த தமிழ் சிங்கள புத்தாண்டை கிழக்கு கரையோரத்தில் கொண்டாடி மகிழ வருமாறு Sun Siyam பாசிகுடா அனைவரையும் அன்புடன் அழைத்துள்ளது. சூரியக் கொண்டாட்டம் எனும் தொனிப்பொருளில் புத்தாண்டை வரவேற்கும் பல நிகழ்வுகளை Sun Siyam பாசிகுடா ஏற்பாடு செய்துள்ளது. 

பாசிகுடாவின் மாசற்ற கரையோரத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர ஐந்து நட்சத்திர கடற்கரை ரிசோர்ட், காலத்தால் அழியாத சடங்குகள் மகிழ்ச்சியான பொழுதுபோக்குகளைச் சந்திக்கும் ஒரு பண்டிகை சொர்க்கமாக மாறுகிறது. பாரம்பரிய கொண்டாட்டங்கள் முதல் வேடிக்கை நிறைந்த குடும்ப விளையாட்டுகள் வரை, விருந்தினர்களுக்கு இலங்கை பாரம்பரியத்தின் உள்ளம் கவரும், ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் சாரத்தைக் கொண்டாடும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். 

புத்தாண்டு மலர்வுடன் சூரிய உதயத்தின் போது, விருந்தினர்கள் பால் பொங்கும் நிகழ்வை கண்டு மகிழலாம். சுபீடசம் மற்றும் புதிய ஆரம்பத்தை குறிக்கும் பாரம்பரிய முறையாக இது அமைந்துள்ளது. பலகார மேசை அல்லது பாரம்பரிய இனிப்புப் பலகார மேசையில், புத்தாண்டின் பாரம்பரிய உணவுப் பண்டங்களான கொக்கிஸ், பயற்றம் பணியாரம், அல்வா மற்றும் கொண்ட கெவுங் ஆகியவற்றை கொண்டிருக்கும். மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் தொடர்ந்து, கலாசார முக்கியத்துவத்துடன். தேசத்தின் கலாசார பெறுமதியை உணர்த்துவதாக அமைந்திருக்கும். 

Kids Corner பகுதியில், பலூன்களை உடைத்தல் மற்றும் யானையின் மீது கண் வைப்பது போன்ற விளையாட்டுத்தனமான மகிழ்வூட்டும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும். இது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் நினைவுகளையும் வழங்கும். குடும்பங்கள் மற்றும் குழுக்கள் கைகளால் போத்தல் நிரப்புதல், சாக்கு பந்தயங்கள் மற்றும் எப்போதும் பிரபலமான இசை நாற்காலிகள் உள்ளிட்ட சுலபமான ஆனால் கலகலப்பான விளையாட்டுகளால் பிணைக்கப்படலாம் – நட்பு ரீதியான போட்டிகளினூடாக அதிகம் ஆனந்தத்தை தூண்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சாகசத்தை விரும்புவோருக்காக கயிறிழுத்தல் (ஆண்கள் எதிர் பெண்கள்), தலையணை சண்டை மற்றும் கண்கட்டி முட்டி உடைத்தல் போன்றன புத்தாண்டை வரவேற்கும் வகையில் முன்னெடுக்கப்படும். 

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் பெறும் நிலையில், Sun Siyam பாசிகுடா விருந்தினர்களுக்கு இலங்கையின் பிரத்தியேகமான விருந்தோம்பல் அனுபவத்துடன், சொகுசையும் வழங்குகிறது. நாட்டின் மிகவும் அழகிய கடற்கரைப் பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள இந்த ரிசோர்ட், 34 விசாலமான ஒன்று முதல் இரண்டு படுக்கையறைகள் கொண்ட, தோட்டத்தை பார்வையிடல் மற்றும் கடற்கரை பார்வையிடல் வசதிகளை கொண்ட பெவிலியன்களுடனான தங்குமிடங்களை வழங்குகிறது. இதில் நட்சத்திரங்களுக்கு கீழ் அல்லது நீச்சல் குளத்தின் ஓரத்தில் இனிய உணவு அனுபவங்கள், அமைதியான ஸ்பா, ஆடம்பரமான வரையறைகளில்லாத நீச்சல் தடாகம் மற்றும் பல்வேறு கடலோர சாகசங்களை அணுகுவதற்கான அணுகல் ஆகியவை உள்ளன - இது உங்கள் புத்தாண்டு விடுமுறைக்கு ஏற்ற இடமாக அமைகிறது. 

பண்டிகை மாதமான ஏப்ரல் மாதம் முழுவதிலும் இருவருக்கு half-board அடிப்படையில் விசேட விலைக்கழிவுடனான கட்டணமாக ரூ. 47,600 ஐ Sun Siyam பாசிகுடா வழங்குகிறது. வழங்கப்படும் இதர சலுகைகளில், இலவச அறை மேம்படுத்தல்கள், முன்கூட்டியே செக்-இன் செய்தல் மற்றும் தாமதமாக செக்-அவுட் செய்தல் ஆகியவை அடங்கும், இவை கிடைக்கும் தன்மையைப் பொறுத்து வழங்கப்படும். 

மாசற்ற கடற்கரைகள் மற்றும் வளமான கலாசார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற பாசிகுடா, உண்மையான அனுபவங்களுடன் இயற்கை உலகுடனான பிரத்தியேகமான இணைவை வழங்குகிறது. ஆடம்பரமான தங்குமிடங்கள், சிறந்த உணவு வகைகள், புத்துணர்ச்சியூட்டும் ஸ்பா சிகிச்சைகள் மற்றும் பல்வேறு அற்புதமான உல்லாசப் பயணங்கள் அனைத்தும் விருந்தினர்களுக்குக் கிடைக்கின்றன; அவை அனைத்தும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளை உருவாக்கக்கூடிய வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

முற்பதிவுகளுக்கு அழையுங்கள் 0652055555 அல்லது மேலதிக தகவல்களுக்கு பார்வையிடுங்கள் https://www.sunsiyam.com/sun-siyam-pasikudah/

Comments
0

MOST READ
01
02
03
04
05