Apr 10, 2025 - 12:50 PM -
0
இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகளை வழங்கும் DFCC வங்கி, தனது டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளின் புதிய முன்னெடுப்பாக, தனது நம்பத்தகுந்த Data Center சேவை வழங்குனராக OrionStellar உடன் கைகோர்த்துள்ளது. இலங்கையின் முதலாவது carrier-neutral, high-density மற்றும் ANSI/TIA Rated-3 சான்றளிக்கப்பட்ட Data Center ஆன OrionStellar, உயர் மட்ட பாதுகாப்பு, தங்கியிருக்கும் திறன் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றை உறுதி செய்கிறது. பெருமளவு ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிசார் சூழலில், உயர் மட்ட நியமங்களை பேணுவதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை இந்த கைகோர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது.
DFCC வங்கி முன்னெடுக்கும் நிலைபேறாண்மை மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பு புத்தாக்க நடவடிக்கைகளின் நீடிப்பாக இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளது. OrionStellar இன் வலுச்சிக்கனமான Data Center வடிவமைப்பு என்பது, சூழலுக்கு நட்பான தொழினுட்பம் மற்றும் நிலைபேறான வியாபார செயற்பாடுகள் போன்றவற்றுக்கான வங்கியின் நீண்ட கால அர்ப்பணிப்புடன் பொருந்துவதாக அமைந்துள்ளது. அதனூடாக, சூழலுக்கு பொறுப்பு வாய்ந்த தன்மையிலிருந்து விலகாமல், மேம்படுத்தப்பட்ட வினைத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
அதிக செயற்பாட்டு செலவுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் சிக்கல் தன்மைகள் போன்றன காரணமாக, உள்ளக Data Center ஐ பேணுவது என்பது பெருமளவு சவால்களைக் கொண்டது. முழுமையாக நிர்வகிக்கப்படும் நவீன வசதிகள் படைத்த தீர்வை வழங்குவதனூடாக இந்த சவால்களை இல்லாமல் செய்வதில் OrionStellar கவனம் செலுத்தி, எந்நேரமும் உதவிச் சேவைகளை வழங்குகிறது.
DFCC வங்கியின் விந்தியா சோலங்காரச்சி இந்தப் பங்காண்மை தொடர்பில் குறிப்பிடுகையில், “OrionStellar இன் தெரிவு என்பது பாதுகாப்பு, அளவீடு மற்றும் சேவை அடிப்படையிலான Data Center பங்காளருக்கான தேவையின் அடிப்படையில் அமைந்திருந்தது. தொழிற்துறையின் முன்னோடியான பாதுகாப்பு ஏற்பாடுகள், உயர் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாடிக்கையாளருக்கு முக்கியத்துவமளிக்கும் வழிமுறை போன்றவற்றுடன் OrionStellar இனால் நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அவசியமான நெகிழ்ச்சித் தன்மை, தங்கியிருக்கும் திறன் போன்றன வழங்கப்படுகின்றன. அதன் சுயாதீன செயற்பாடுகளினூடாக, நடுநிலைத்தன்மை உறுதி செய்யப்பட்டு, பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையும் உறுதி செய்யப்படுகிறது.” என்றார்.
இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் இந்தப் பங்காண்மை மிகவும் முக்கியத்துவமான அங்கமாக அமைந்துள்ளது. Orion City IT Park இனால் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் நீடிப்பாக அமைந்திருக்கும் OrionStellar, தகவல் தொழினுட்ப கட்டமைப்பை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்திய வண்ணமுள்ளது. நவீன, சர்வதேச தரவு நிலை தீர்வுகளை வழங்கி, வங்கியின் டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாடுகளுக்கு வலிமை சேர்ப்பது மாத்திரமன்றி, வாடிக்கையாளர் நோக்கு, நிலைபேறாண்மை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றில் தொழிற்துறை நியமங்களையும் OrionStellar ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த Data Centerகளுக்கான தேவைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு விஜயங்களை மேற்கொள்ள OrionStellar திறந்திருக்கும். மேலதிக தகவல்களுக்கு Fazly உடன் +94 76 135 7297 அல்லது fazly@orionstellar.com ஊடாக தொடர்பு கொள்ளவும்.