Apr 10, 2025 - 01:13 PM -
0
நடப்பு ஐபிஎல் சீசனின் 23 ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ஓட்டங்களை அடித்தார்.
இதையடுத்து, 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்க இயலவில்லை. பந்து வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடைசி ஓவரில் அந்த அணி 30 யார்டு வட்டத் துக்குள் 5 வீரரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவருக்கு சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டது. 2 ஆவது முறையாக அந்த அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியான் பராக்குக்கு 12 லட்சம் ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது.
மேலும், சஞ்சு சாம்சனை தவிர்த்து அணியில் விளையாடிய மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.