வடக்கு
கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் விடுவிப்பு

Apr 10, 2025 - 03:07 PM -

0

கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் விடுவிப்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்று (10) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்த நிலையில், பிரதேச செயலரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் தலைமை காரியாலயம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05