செய்திகள்
மகாவலி ஆற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

Apr 11, 2025 - 07:34 AM -

0

மகாவலி ஆற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேரத் (103984), பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்தை பெண்ணை காப்பாற்றியுள்ளார்.


இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் குறித்த அதிகாரிக்கு தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதில் உயிர் பிழைத்த இளம் பெண் கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

அந்த இளம் பெண் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05