செய்திகள்
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Apr 11, 2025 - 09:41 AM -

0

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பியகம பொலிஸ் பிரிவின் முதலீட்டு வலயப் பகுதியில் நேற்று (10) காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களைத் திருடிய குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் திருடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரிடம் முன்னெடுப்பட்ட மேலதிக விசாரணையில், பியகம, கிரிபத்கொடை, கடுவலை, வெலிவேரிய மற்றும் அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை உடைத்து ஏராளமான சொத்துக்களைத் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது. 

திருடப்பட்ட இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒரு கணினி, ஐந்து உருகிய தங்கக் கட்டிகள், ஒரு எரிவாயு சிலிண்டர், ஒரு சலவை இயந்திரம் மற்றும் ஒரு குளிர்சாதன பெட்டி ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05