வடக்கு
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

Apr 11, 2025 - 03:58 PM -

0

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (11) மிகச் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது.

 

ஆலய பிரதம குரு இரத்தினசபாபதி குருக்கள் தலைமையில் கிரியை வழிபாடுகள் நடைபெற்றது.

 

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் குறித்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனங்களின் குரு முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

 

கும்பாபிஷேகத்தில் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகைதந்த பலரும் கலந்துகொண்டனர்.

 

இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரினி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

 

பிரதமர் ஆலயத்திற்கு வருகை தர விருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்ததுடன், ஆலய தர்மகார்த்த முக்கியஸ்தர்களுடன் பேசியதை அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05