Apr 11, 2025 - 05:52 PM -
0
தேசிய மக்கள் சக்தியின் யாழ். காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று (11) இடம்பெற்றது.
இன்று பிற்பகல் காரைநகர் கதிர்காம சுவாமி முருகன் கோவில் பகுதியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை முதன்மை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், காரைநகர் பிரதேச சபை வேட்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--