செய்திகள்
சட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது

Apr 11, 2025 - 10:40 PM -

0

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக சிகரெட் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்த விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 29 வயதான வர்த்தகர் என தெரியவந்துள்ளது. 

துபாயில் இருந்து வந்த சந்தேக நபர், 15,000 சிகரெட்டுகள் அடங்கிய 75 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05