இந்தியா
பீகாரில் கனமழை - இதுவரை 61 பேர் பலி

Apr 12, 2025 - 07:08 AM -

0

பீகாரில் கனமழை - இதுவரை 61 பேர் பலி

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பெய்ந்து வரும் கனமழையால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மின்னல் தாக்குதல், ஆலங்கட்டி மழை போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 25 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 

மழையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மந்திரி நிதிஷ்குமார், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில், பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

39 பேர் ஆலங்கட்டி மழையாலும், 22 பேர் மின்னல் தாக்கியதாலும் பலியானார்கள். அதிகபட்சமாக, நாலந்தா மாவட்டத்தில் 23 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ